KAЯTHIK's Blog

Welcome to my world…

பொன்னியின் செல்வன் July 12, 2009

பொன்னியின் செல்வன்

நான் மிகுந்த ஆர்வத்துடன் படித்த புத்தகம். அமரர் கல்கி க்ரிஷ்ணமூர்த்யின் படைப்பு.

1950 களில் இந்த கதை கல்கி வார இதழில் மூன்றரை ஆண்டு காலம் வெளிவந்தது. [கண்டிப்பாக எனக்கு அவ்வளவு பொறுமை இல்லை]. இந்த கதை, படித்தவர்கள் மனதில் இன்னும் பசுமையாய் உள்ளது.

தற்பொழுது இந்த கதை புத்தகமாக அச்சிடப்பட்டு விற்கப்படுகிறது. ஐந்து அல்லது ஆறு பாகங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. விலை மிக குறைவு.

கண்டிப்பாக நான் கதையை சொல்ல போவது இல்லை. நீங்களே படித்து அதன் சுவையை அனுபவித்துக்கொள்ளுங்கள்.

துணுக்குகள்:

– கதை நடப்பது இன்றைய தேதியிலிருந்து சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்.

– கதையின் நாயகன் ‘வல்லவரையன் வந்தியதேவன்’. குறும்பு, வீரம், அழகு, அறிவு அனைத்தும் நிறைந்தவன். ‘இராஜ இராஜ சோழர்’இன் நண்பன்.

– ஆசிரியர் சோழ நாட்டின் வளத்தை பற்றி கூறும் பொழுது அவ்வளவு அழகாக வர்ணிக்கிறார். அப்போது நம் தமிழ்நாடு எவ்வளவு அழகாக இருந்திருக்கும் என்று எண்ணி பார்க்க தோன்றுகிறது.

– ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அடுத்து என்ன நடக்குமோ என்ற பரபரப்பு ஏற்படுகிறது. அப்போது ஆசிரியரின் திறமையை பற்றி பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

– வந்தியதேவன் மற்றும் குந்தவை சந்திக்கும் பக்கங்களை பலமுறை படித்தாலும் சுவை குறையாது.

–கதையில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் நம் மனதில் பதிகிறது.

மேலும் தெரிந்துகொள்ள….

http://en.wikipedia.org/wiki/Ponniyin_Selvan
http://www.tamilnation.org/hundredtamils/kalki.htm
http://www.ponniyinselvan.in/

 

6 Responses to “பொன்னியின் செல்வன்”

  1. Jawahar Says:

    அண்ணா உங்கள் வயது என்ன?

    kgjawarlal@yahoo.com

    • KARTHIK Says:

      இப்ப 20. ஏன் இந்த கேள்வி :)

      • Jawahar Says:

        இருபது வயதில் கல்கிக்கும் பொன்னியின் செல்வனுக்கும் ரசிகராக இருப்பது கொஞ்சம் ஆச்சரியமானது.பாராட்டுக்கள்.என் மகன்கள் கல்கியின் ரசிகர்கள்.எனக்கு அவரது சமூகச் சிறுகதைகள் மட்டுமே பிடிக்கும்.

        http://kgjawarlal.wordpress.com
        kgjawarlal@yahoo.com

  2. Sathiyan Says:

    “பொன்னியின் செல்வன்

    நான் மிகுந்த ஆர்வத்துடன் படித்த புத்தகம்”

    Even I, Karthik. But not complied.

    • Jawahar Says:

      நீங்கள் இணைத்திருக்கும் புகைப்படத்தைப் பார்த்ததும் என் மனசில் தோன்றிய ஹைக்கூ:

      நனைந்திருக்கிற அவளைக் காய வைக்க
      என் மனசுக்குள்
      காமத் தீ.

      http://kgjawarlal.wordpress.com
      kgjawarlal@yahoo.com

  3. mangaimano Says:

    Crazes on Tamil Historic novels never decrease!!!!!!!
    சாண்டல்யன் கல்கி கருணாநிதி போன்றவர்களின் படைப்புகளுக்கு என்றுமே கிராக்கிதான்


Leave a Reply